Wednesday, January 15, 2014

வெயில் நிறத்து தோல் கொண்டு


வெயில் நிறத்து தோல் கொண்டு

பல்லவி


ஆண் - வெயில் நிறத்து தோல் கொண்டு
             குயில் போல கதைப்பவளே
             துயில் கொள்ளப் போகையிலே
              மெயில் கொஞ்சம் பார்ப்பாயா?

பெண் - உன் போனில் ரிங்டோனாய்
              என் குரலைப் போட்டவனே
              கண் துயில போகையிலே
              இன்பாக்ஸை பார்ப்பாயா?


சரணம் 1

ஆண் -    இதயத்தின் நான்கறையில்
                 இன்பமாக உன் நினைவு
பெண் -    இதை நானும் உணர்வேனே
                  இங்கேயும் உன் கனவு

ஆண் -    ஏ.. பெண்ணே...
                நீ என்னை என்ன செய்து
                 உள்ளத்தில் ஒழித்துக்கொண்டாய்

பெண் -    ஏ பையா...
                 இரு விழிக்குள் எனை இருத்தி
                  இமைகளால் அணைத்துக்கொண்டாய்            (வெயில்)


சரணம் 2

ஆண் -    காதலிலே தோல்வியில்லை
                காதலர் தோற்பதில்லை
பெண் -   சாதலிலே பயன்களில்லை
                சாதனை ஏதுமில்லை

ஆண் -    அன்பே நீ...
                எனக்காக பிறந்தவளே
                எனக்காய் மலர்ந்தவளே

பெண் -    கண்ணா நீ...
                 முதல் குழந்தை நீதானே
                 முத்தங்கள் தருவேனே                    (வெயில்)


(பாடலுக்கான சூழ்நிலை – தலைவனும் தலைவியும் காதல் கொள்ளும்;போது)

Wednesday, January 8, 2014

இஸ்லாமிய மெல்லிசைப் பாடல் - வல்லோனின் ஆணை வரமாய் நினைத்தே...

இஸ்லாமிய மெல்லிசைப் பாடல் - 

வல்லோனின் ஆணை வரமாய் நினைத்தே...

வல்லோனின் ஆணை
வரமாய் நினைத்தே தினமும்
வாழ்ந்திடுவோம்..
நோன்பின் புனிதம்
மனதினில் ஏற்றே
நன்மையின்பால் விரைவோம்! (பல்லவி)

இம்மை வாழ்க்கையும்
மறுமை வாழ்க்கையும்
சிறந்திட ஆசைகொள்வோம்
உண்மையின் பாதையில்
உயிர் துறப்பதற்கு - நாளும்
துணிந்து நிற்போம்! (அனு பல்லவி)

வறியோரின் பசிபோக்க
வழிகாட்டுவோம் - நாம்
ஏழைகள் வாழ்வினிலே
எழில் கூட்டுவோம்..
மனத்தூய்மை கொண்டே - நாம்
மறை ஓதுவோம் - தினம்
இறைபோற்றி அளிவில்லா
அருள் வேண்டுவோம்!

லைலத்துல் கத்ர் என்ற
இரவொன்றினை - ரமழானில்
தந்திட்டாய் யா ர'ஹ்மானே..
சுவனமாம் ரய்யானில்
வீற்றிருப்போமே - ஸவ்ம் என்ற
நோன்புகளை நோற்பதினாலே! (சரணம் - 1)

துஆக்களும் திருநாளில்
கபூல் ஆகுமே - அந்த
ஷைத்தான்கள் பயத்தாலே
வெருண்டோடுமே..
உடல் பிணியும் நீங்கும்
இந்த ரமழானிலே - எம்
உணர்வுகளும் சீராகும்
இது போதுமே!

உலகத்து மாந்தரே
கேட்டிடுவீரே - ஸக்காத்தும்
ஸதக்காவும் வழங்கிடுவீரே..
மக்கத்து மாணிக்கம்
நபிபெருமானின் - நாமத்தில்
ஸலவாத்தும் சொல்லிடுவீரே!!! (சரணம் - 2)