Wednesday, January 15, 2014

வெயில் நிறத்து தோல் கொண்டு


வெயில் நிறத்து தோல் கொண்டு

பல்லவி


ஆண் - வெயில் நிறத்து தோல் கொண்டு
             குயில் போல கதைப்பவளே
             துயில் கொள்ளப் போகையிலே
              மெயில் கொஞ்சம் பார்ப்பாயா?

பெண் - உன் போனில் ரிங்டோனாய்
              என் குரலைப் போட்டவனே
              கண் துயில போகையிலே
              இன்பாக்ஸை பார்ப்பாயா?


சரணம் 1

ஆண் -    இதயத்தின் நான்கறையில்
                 இன்பமாக உன் நினைவு
பெண் -    இதை நானும் உணர்வேனே
                  இங்கேயும் உன் கனவு

ஆண் -    ஏ.. பெண்ணே...
                நீ என்னை என்ன செய்து
                 உள்ளத்தில் ஒழித்துக்கொண்டாய்

பெண் -    ஏ பையா...
                 இரு விழிக்குள் எனை இருத்தி
                  இமைகளால் அணைத்துக்கொண்டாய்            (வெயில்)


சரணம் 2

ஆண் -    காதலிலே தோல்வியில்லை
                காதலர் தோற்பதில்லை
பெண் -   சாதலிலே பயன்களில்லை
                சாதனை ஏதுமில்லை

ஆண் -    அன்பே நீ...
                எனக்காக பிறந்தவளே
                எனக்காய் மலர்ந்தவளே

பெண் -    கண்ணா நீ...
                 முதல் குழந்தை நீதானே
                 முத்தங்கள் தருவேனே                    (வெயில்)


(பாடலுக்கான சூழ்நிலை – தலைவனும் தலைவியும் காதல் கொள்ளும்;போது)

No comments:

Post a Comment